350-க்கும் மேற்பட்ட காளைகள பங்கேற்ற ஏறு தழுவல் போட்டி; காளைகள் முட்டியதில் 15 பேருக்கு வீரத் தழும்பு.... 

First Published Apr 23, 2018, 9:28 AM IST
Highlights
Competition for over 350 bulls participating 15 get injured


அரியலூர்
 
அரியலூரில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற ஏறு தழுவல் போட்டியில் காளைகள் முட்டியதில் 15 பேர் வீரத் தழும்பு பெற்றனர். 

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள கீழையூர் கிராமத்தில் நேற்று ஏறு தழுவல் போட்டி நடைபெற்றது. இதையொட்டி கிராமத்தின் நடுவீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. 

முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.

இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிபோட்டு அடக்கினர். அப்போது மக்கள் கைதட்டி அவர்கஆரவாரம் செய்தனர். 

இதில் அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருமானூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 350-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

சில முரட்டுக் காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியதில் புள்ளம்பாடியை சேர்ந்த மகேஷ்வரன் (27), பூண்டியை சேர்ந்த சக்திவேல் (27), அயன்சுத்தமல்லியை சேர்ந்த இளங்கோவன் (30), வடுக பாளையத்தை சேர்ந்த முரட்டுகாளை (39), கண்டராதித்தத்தை சேர்ந்த பிரபாகரன் (28) உள்பட 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

ஏறு தழுவல் போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயங்கள், வெள்ளி பாத்திரங்கள், நாற்காலிகள், கட்டில் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. 

இந்தப் போட்டியை காண அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருமானூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான மக்கள் திரளாக பங்கேற்று போட்டியை கண்டு களித்தனர். 

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கீழையூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
 

click me!