மேற்கு நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு நிலை : மழைக்கு வாய்ப்பு!

First Published Dec 22, 2016, 9:25 AM IST
Highlights


தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது மன்னார் வளைகுடா வழியாக தென் தமிழகத்தில் நிலை கொண்டு இருந்தது. இது மேற்கு நோக்கி நகர்வதால் நாகை திருவாரூர், தஞ்சை ஆகிய கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக அறந்தாங்கியில் 7 செண்டி மீட்டர் மழையும், பட்டுகோட்டையில் 5 செண்டி மீட்டர் மழையும், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் பகுதிகளில் தலா 4  செண்டி மீட்டர் மழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

click me!