சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை…. அப்பாடா வெப்பம் தணிஞ்சு குளிர்ச்சியா  இருக்கு… பொதுமக்கள் மகிழ்ச்சி..

 
Published : Jul 12, 2017, 07:05 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை…. அப்பாடா வெப்பம் தணிஞ்சு குளிர்ச்சியா  இருக்கு… பொதுமக்கள் மகிழ்ச்சி..

சுருக்கம்

rain in chennai

கடும் வெயில் கொளுத்தி வந்த நிலையில், சென்னை  மயிலாப்பூர், சாந்தோம், மீனம்பாக்கம், மணலி உட்பட பல இடங்களில் கன மழு பெய்துள்ளது. சென்னையில் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நேற்று  காலை முதலே வெயில் வாட்டிவந்த நிலையில், மாலையில்

பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து விடிய விடிய மழை பெய்தததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கடுத்து ஓடியது

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதலே பலத்த மழை பெய்தது. கன மழையால் நெல், கரும்பு, வேர்கடலை பயிரிட்டுள்ள விவசயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

காஞ்சிபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவை தாண்டியும் பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதேபோல் நாகப்பட்டினம், வேலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று இரவு பரவலாக மழைபெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 

PREV
click me!

Recommended Stories

விஜய் கட்சியில் சேரும் முக்கிய நடிகர்..! அவர் துணிவு ரொம்ப பிடிக்கும்னு பேட்டி
டிசம்பர் மாதத்தில் மழை எப்படி இருக்கும்? அடுத்தடுத்து உருவாகும் புயல்? டெல்டா வெதர்மேன் முக்கிய தகவல்