இந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது ! ரெட் அலர்ட் !! சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை !!

By Selvanayagam PFirst Published Oct 22, 2019, 7:11 AM IST
Highlights

தமிழகத்தில் உள்ள கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாயப்புள்ளததால் அம்மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கனமழை காரணமாக ராமநாதபுரம், சேலத் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளி கலலூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று) பரவலாக மழை பெய்யும் என்றும், சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 

தென்தமிழகம் மற்றும் குமரிக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிகளிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இருக்கிறது.

இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து இருக்கிறது. ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்.

தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிகளுக்கு நாளை(அதாவது இன்று) மீனவர்கள் செல்ல வேண்டாம்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை தொடரக் கூடும் என்றும் இன்று   மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் எந்த ஒரு மாவட்டத்திலும் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்தால், ஒட்டுமொத்த தமிழகத்துக்கே ‘ரெட் அலர்ட்’ விடுக்கும். அதன்படி தமிழகத்தின் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தான் இந்த ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டு இருக்கிறது. இந்த பகுதிகளில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் 20 செ.மீ.க்கு மேல் மழைப்பொழிய வாய்ப்பு உள்ளது. 

சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மாவட்டத்தில் பூண்டி, மாதவரம், சோழவரம், மீனம்பாக்கம், பல்லாவரம், கோயம்பேடு, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அண்ணாநகர்,வடபழனி குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதனிடையே கனமழை காரணமாக ராமநாதபுரம், சேலத் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளி கலலூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!