வாவ்...!!! சென்னைக்கு வருது மழை...!! நல்ல செய்தி சொன்ன வெதர்மேன் பிரதீப்...!

First Published May 9, 2017, 10:26 PM IST
Highlights
rain come to chennai by tamilnadu whether report man piratheep


சென்னையில் எப்போதுதான் மழை பெய்யும் என்ற ஏக்கத்தில் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர். தற்போது நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சென்னை நோக்கி நகர்ந்தால் மழை கன்பார்ம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தற்போது சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கூட மழை பின்னி பெடலெடுக்கிறது.

ஆனால் சென்னையில் மழைக்கான சுவடு காணப்பட்ட்டாலும் அது எப்போது என்று தெரிந்து கொள்வோம். வாருங்கள்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சென்னையில் மழை பெய்ய வேண்டுமானால் அது கடலில் இருந்து உருவாக வேண்டும். அதற்கு காற்றழுத்தத் தாழ்வு நிலையோ அல்லது புயலோ கடலில் மையம் கொள்ள வேண்டும்.

கடல்பரப்பில் இல்லாது நிலத்தில் இருந்து சென்னைக்கு மழை உருவாக வேண்டும் என்றால், உள்மாவட்டங்களில் தற்போது நிலைகொண்டுள்ள காற்று சென்னையை நோக்கி நகர வேண்டும்.

ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை உருவாகும்போது உள்மாவட்டங்களில் உள்ள காற்று சென்னையை நோக்கி நகரும் சூழல் ஏற்படும்.

அப்போது சென்னையில் மழை பெய்யும் சூழல் ஏற்படும். அதுவரையில் உள்மாவட்டங்களோடு ஒப்பிட்டு நாம் மழையை எதிர்பார்க்க வேண்டாம்.

இருப்பினும் நகரின் ஒருசில இடங்களில் இன்றோ அல்லது நாளையோ லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

உள்மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பெய்யும். நாளை காவிரி டெல்டா பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

உள்மாவட்டங்களில் மட்டும் தொடர்ந்து மழை பெய்துவருவதற்கு அப்பகுதியில் காற்று குவியும் நிலையே காரணம்.

சென்னையைப் பொறுத்தவரை தற்போது வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கிறது.

கத்திரி வெயில் தொடங்கியதில் இருந்தே 40 டிகிரி வெப்பம் என்ற அளவில் சென்னையில் வெயில் அடிக்கவில்லை.

ஆனால், வரும் 14-ம் தேதி முதல் கத்திரி வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.

இருப்பினும், வாட்ஸ் அப் குரூப்களில் தகவல் பரப்பப்படுவதுபோல் 42 டிகிரி செல்சியஸ், 50 டிகிரி செல்சியஸ் என்று இருக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!