#BREAKING: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை .,? - அறிவிப்பு

By Thanalakshmi VFirst Published Nov 28, 2021, 10:11 PM IST
Highlights

தொடர் கனமழை காரணமாக 12 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  நாளை ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்  என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  நாளை  இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையொட்டி, பாதுகாப்பு கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை,விழுப்புரம் ,கடலூர், திருவண்ணாமலை , பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூரில் நடுநிலைப்பள்ளிகளுக்கு மட்டும் ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு அந்தந்த தலைமையாசிரியர் மழையை பொறுத்து விடுமுறை வழங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் விட்டுவிட்டு பெய்யும் மழையினால், அடுத்த இரண்டு நாட்களுக்கு பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

click me!