
தமிழகத்திற்கு புயல் வாய்ப்பு இல்லை…சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…
இலங்கையையொட்டியுள்ள, தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இக்காற்றழுத்தத் தாழ்வுநிலை புயலாக மாற வாய்ப்பில்லை என்றும், மீண்டும் ஒரு புயல் வருவதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் வெறும் வதந்தியே என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.