மோடி செல்ஃபி பாயிண்ட் தேவையா? எதுக்கு இந்த வெட்டிச் செலவு? ஷாக் கொடுத்த ஆர்டிஐ பதில்!

By SG BalanFirst Published Dec 27, 2023, 7:27 PM IST
Highlights

பிரதமர் படத்துடன் செல்பி பூத் அமைக்க ரூ.1.25 லட்சம் முதல் ரூ.6.25 லட்சம் வரை செலவிடப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசு வீண் செலவு செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பிரதமர் மோடியின் படத்துடன் நிரந்தர 3டி செல்பி பாயிண்ட் அமைக்க மத்திய அரசு ரூ.6.25 லட்சம் வரை செலவழிக்கிறது என்றும் தற்காலிக செல்பி பாயிண்ட் அமைக்க  ரூ.1.25 லட்சம் செலவு செய்யப்படுகிறது என்றும் ஆர்டிஐ பதில் மூலம் தெரியவந்துள்ளது.

ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரியான அஜய் போஸ் ஆர்டிஐயின் கீழ் தாக்கல் செய்த கேள்விக்கு பதிலளித்த மத்திய ரயில்வே துணைப் பொது மேலாளர் அபய் மிஸ்ரா, மும்பை, புசாவல், நாக்பூர், புனே, சோலாப்பூர் ஆகிய ஐந்து ரயில்வே மண்டலங்களில் உள்ள 50 ரயில் நிலையங்களில் மோடி படத்துடன் 3டி செல்பி பாயிண்டுகள் நிறுவியிருப்பதாகக் கூறியுள்ளார்.

Latest Videos

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், கல்யாண், நாக்பூர், பெதுல் உள்ளிட்ட 30 A வகை ரயில் நிலையங்களில் தற்காலிக செல்ஃபி பாயிண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன; கர்ஜத், கசரா, லத்தூர், கோபர்கான் போன்ற 20 C வகை ரயில் நிலையங்களில் நிரந்தரமாக செல்ஃபி பாயிண்டுகள் நிறுவப்பட்டுள்ளன என்று ஆர்டிஐ விண்ணப்பத்துக்கான பதிலில் சொல்லப்பட்டுள்ளது.

Deepfake படங்களைத் தடுப்பது உங்க பொறுப்பு! சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அட்வைஸ்!

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய தகவல் தொடர்புப் பணியகம், ஒவ்வொரு A வகை ரயில் நிலையத்திலும் தற்காலிக 3டி செல்பி பாயிண்ட் அமைக்க ரூ.1.25 லட்சம் கொடுக்கிறது. C வகை ரயில் நிலையத்தில் நிரந்தர 3டி செல்பி பாயிண்ட் அமைக்க ரூ.6.25 லட்சமும் நிதி வழங்க ஒப்புதல் கொடுத்துள்ளது எனவும் ஆர்டிஐ பதிலில் கூறப்படுகிறது.

மற்றொரு RTI கேள்விக்கு பதிலளித்த வடக்கு ரயில்வே, நாடு முழுவதும் 100 வெவ்வேறு ரயில் நிலையங்களில் பிரதமரின் படத்தோடு செல்ஃபி பாய்ண்டுகள் நிறுவப்படும் என்றும், சில நிலையங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட செல்ஃபி பாயிண்டுகள் இருக்கும் என்றும் கூறியுள்ளது. உதாரணமாக, டேராடூன், அம்பாலா, புது தில்லி, அமிர்தசரஸ், அயோத்தி, சண்டிகர் ஆகிய இடங்களில் ஒவ்வொரு நிலையத்திலும் மூன்று செல்ஃபி பாயிண்டுகள் நிறுவப்பட உள்ளன.

திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர், திருவாரூர் சந்திப்பு, வேலூர் கன்டோன்மென்ட் உள்ளிட்ட 11 ரயில் நிலையங்களில் பிரதமரின் 3டி செல்பி புகைப்படக் கூடங்கள் அமைக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி கோட்டம் ஆர்.டி.ஐ கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் பிரதமர் படத்துடன் செல்பி பூத் அமைக்க மத்திய அரசு வீண் செலவு செய்வதாக விமர்சித்துள்ளனர்.

சென்னையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து தொழிலாளி பலி

“ரயில் நிலையங்களில் மோடியின் 3D செல்ஃபி பாய்ண்ட் நிறுவுவதன் மூலம் வரி செலுத்துவோரின் பணத்தை முற்றிலும் வீணடிக்கிறார்கள். மோடி அரசு மாநிலங்களுக்கு வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் வழங்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியும் நிலுவையில் உள்ளது. ஆனால் இந்த மலிவான தேர்தல் ஸ்டண்ட்களுக்காக பொதுமக்களின் பணத்தை தாராளமாகச் செலவு செய்ய அவர்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கிறது!" என்று கார்கே சாடியுள்ளார்.

“யாராவது ஒருவர் ரயில் பயணத்தில் ஏற்பட்ட மோசமான அனுபவம் பற்றிப் புகார் சொல்லாத நாளே இருப்பதில்லை. இருந்தும் மக்கள் ரயில் சேவைகளுக்கு அதிக கட்டணம் செலுத்தி வருகின்றனர். இது மத்திய ரயில்வேக்கு அவமானம்” பிரியங்கா சதுர்வேதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அரசாங்க நிதியை அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்தும் செயல் என்று சசி தரூர் கூறியுள்ளார்.

புனேயில் சிம்போசிஸ் கல்லூரி அருகே 12 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி விபத்து!

click me!