பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் இந்தியை அழித்த திமுக நிர்வாகிகள்.! சுற்றி வளைத்த ஆர்பிஎப்

Published : Feb 24, 2025, 07:21 AM IST
பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் இந்தியை அழித்த திமுக நிர்வாகிகள்.! சுற்றி வளைத்த ஆர்பிஎப்

சுருக்கம்

தேசிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது. மத்திய அரசு நிதி நெருக்கடி கொடுக்க, தமிழக அரசு வரி நிறுத்த மிரட்டல் விடுத்துள்ளது. திமுகவினர் ரயில் நிலையங்களில் இந்தி பெயர் பலகைகளை அழித்து போராட்டம்.

மும்மொழி கொள்கை- தமிழகம் எதிர்ப்பு

தமிழகத்தில் பல ஆண்டு காலமாகவே இரு மொழி கொள்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேசிய கல்வி கொள்கையில் மும்மொழி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆளுங்கட்சியான திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதே போல அதிமுக, கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் தமிழக அரசு தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 5ஆயிரம் கோடி ரூபாய் வழங்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் உறுதியாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் இருந்து வழங்கப்படுகின்ற வரியை நிறுத்த வேண்டிய நிலை வரும் என அறிவித்தார்.

திமுகவினர் போராட்டம்

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரயில் நிலையங்களில் இந்தியை அழித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். நெல்லை பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இருக்கும் இந்தி பெயரை திமுக பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் ராஜ வர்மன் தலைமையிலான திமுகவினர் கருப்பு மை பூசி அழித்தனர. மேலும் பெயர் பலகையில் தமிழ் வாழ்க என்ற வாசகத்தை எழுதி தமிழ் வாழ்க என்ற கோசத்துடன் அங்கிருந்து வெளியேறினர்.

கருப்பு மை பூசி இந்தி அழிப்பு

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் இருப்பு பாதை காவல்துறையினர் ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் முத்துராஜ் புகாரின் பேரில் திமுக மாநில துணை செயலாளர் உட்பட 6 பேர் மீது அத்துமீறி ரயில் நிலையத்தில் நுழைந்தது அரசு பெயர் பலகையில் கருப்பு மை பூசியது உள்ளிட்ட ரயில்வே பாதுகாப்பு சட்டத்தின் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எழும்பூர் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!
அமித்ஷா, மோடி ஒன்னு கூடி வந்தாலும் காவி நுழைய முடியாது..! திமுகவுக்காக மீண்டும் குதித்த "ஊத்தி கொடுத்த".. கோவன்