
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ் உள்பட 500க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் மதுரையில்திமுக, காங்கிரஸ், வணிகசங்கள்கள், மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட அவர்களைபோலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 500க்கும் மேற்ப்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இச்சம்பவத்தால் மதுரை ரயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.