
தஞ்சையில் ரயில் மறியலில் ஈடுபட்ட த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். அப்போது மயிலாடுதுறையில் இருந்து தஞ்சை வந்த பயணிகள் ரெயிலை மறித்து, த.மா.கா. நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.கே.வாசன் உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜி.கே.வாசன் கூறியதாவது,
மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழக விவசாயிகள் மத்திய குழுவிடம் நியாயம் கேட்கிறார்கள். அறிவுரைகளை கேட்கவில்லை.
விவசாய சங்கங்கள் நடத்திய 2 நாட்கள் ரயில் மறியல் போராட்டம் வெற்றிகரமாக அமைந்துள்ளது.. இனியும் காலம் தாழ்த்தாமல் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசன் தெரிவித்தார்.