'தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய மீனவர்கள்' - 47 படகுகள் கடலுக்குள் செல்ல தடை

 
Published : Oct 19, 2016, 04:48 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
'தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய மீனவர்கள்' - 47 படகுகள் கடலுக்குள் செல்ல தடை

சுருக்கம்

ராமநாதபுரம்  அருகே தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்து மீன்பிடித்ததாக கூறி 47 விசைப்படகுகளுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கடந்த சனிக்கிழமையன்று 47 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

இந்த மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை வைத்து மீன்பிடித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மீனவர் சங்க நிர்வாகிகள் 47 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் மற்றும், படகுகளின் உரிமையாளர்கள் மீது மீன்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து 47 விசைப்படகுகளுக்கும் மீன்பிடிக்க செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 47 படகுகளின் உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட மீன்வளத்துறை இணைஇயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்ததாகவும், மறுஉத்தரவு வரும் வரை இந்த படகுகளுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 20 December 2025: பொருநை அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்!
சனிக்கிழமை அதுவுமா.. தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் 6 முதல் 8 மணி நேரம் மின்தடை!