கடைசி நேரத்தில் பொதுமக்களுக்கு பணம் கொடுத்தால் நமக்கு வாக்களித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை நாம் தான் தகர்க்க வேண்டும் என தெரிவித்த சரத்குமார், ஒட்டு விற்பனைக்கு அல்ல என்பதை திராவிட கட்சிகள் உணர்ந்தால் நம் நாட்டிற்கு நல்லது நடக்கும் என கூறினார்.
சித்தியாக எனக்கு வாய்ப்பு தாருங்கள்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் ராதிகா சரத்குமார் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்பொழுது வாக்காளர்கள் மத்தியில் பேசிய ராதிகா சரத்குமார், பேசுகையில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ராதிகா சரத்குமார் அவர்கள், பேசுகையில்,
தாமரை மலர்ந்தால் இந்த விருதுநகரும் மலரும் என்றும், மேலும் தமிழ் நாட்டை இரண்டு திராவிட கட்சிகளும் ஆட்சி செய்து அழித்து விட்டார்கள் என்றும் குற்றம்சாட்டினார். ஆகவே என்னை தங்கையாக, தோழியாக, சித்தியாக நினைத்து எனக்கு ஒரு முறை வாய்ப்பளித்து எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுக்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
பணம் கொடுத்தால் வாக்கு
இதனை தொடர்ந்து பேசிய சரத்குமார், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிய இந்த நாட்டில் ஆட்சி செய்த இரு திராவிட கட்சிகளும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து தரவில்லையென்றும், இந்த நிலைமை மாற வேண்டும் என்றால் பொதுமக்களாகிய நாம் தான் முதலில் மாற வேண்டும் கடைசி நேரத்தில் பொதுமக்களுக்கு பணம் கொடுத்தால் நமக்கு வாக்களித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை நாம் தான் தகர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாளைய நாம் சந்திதியினர் நல்லா இருக்க வேண்டும் என்றால் நாம் முதலில் நல்ல முடிவு எடுக்க வேண்டும், ஒட்டு விற்பனைக்கு அல்ல என்பதை திராவிட கட்சிகள் உணர்ந்தால் நம் நாட்டிற்கு நல்லது நடக்கும் என்றும் அந்த காலம் நமக்கு வந்து கொண்டிருக்கிறது எனவும் சரத்குமார் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
Annamalai : கமல்ஹாசனுக்கு மனநல மருத்துவமனையில் மூளை பரிசோதனை செய்யனும்! அண்ணாமலை கடும் விமர்சனம்