பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி பாதியில் கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கல் தொகுப்பில் இடம் பெறவுள்ள பொருட்கள் குறித்து கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகையைக் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு பச்சரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் (Pongal Gift) பச்சரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.1000 உள்ளிட்டவை விநியோகிக்கப்பட்டன. அதன்படி இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்பில் இவை அனைத்தும் வழங்கப்படுமா அல்லது இதில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
undefined
இந்நிலையில் கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல ரேசன் கடைகளில் பச்சரிசி தட்டுப்பாடு உள்ளதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளித்த அவர், அரிசி, பருப்பு உள்ளிட்ட 3 மாதங்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் நேரம் என்பதால் பச்சரிசியின் தேவை அதிகம் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான பொங்கல் தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் வாரத்தில் அறிவிப்பார். அப்போது தொகுப்பில் இடம் பெறும் பொருட்கள் தெரிவிக்கப்படும். கரும்பு கொள்முதல் தொடர்பாக வேளாண் துறையயுடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளையும் மற்கெண்டு வருகிறோம். முதல்வர் அறிவிக்கும் அறிவிப்புகளை நாம் முன்கூட்டியே தெரிவிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.