
நீட் தேர்வு பிரச்சனையில் மத்திய அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதன் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலித்தியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்த விலக்களிக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிப்பார் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த 7 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 88 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.
இந்நிலையில் நீட் தேர்வு குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று நம்புவதாக தெரிவித்த ராதாகிருஷ்ணன், மத்திய அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதனைப் பொறுத்துத்தான் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.