"ஓடும் பேருந்தில் காதல் மனைவியை கத்தியால் குத்திய கணவன்" - துடிதுடித்து இறந்த பரிதாபம்

 
Published : May 16, 2017, 10:30 AM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
"ஓடும் பேருந்தில் காதல் மனைவியை கத்தியால் குத்திய கணவன்" - துடிதுடித்து இறந்த பரிதாபம்

சுருக்கம்

husband killed wife in bus

ஓடும் பேருந்தில் காதல் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்,  மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற வழியில் துடிதுடித்து இறந்த கொடூர சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயா. இவர் மனைவி ஆனந்தி. இருவரும் காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். 

இதனிடையே உதயா அடிக்கடி குடித்து விட்டு வந்து ஆனந்தியிடன் தகராறு செய்து வந்துள்ளார். பின்னர் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பத்து நாட்களாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். 

சிறுமுகை அருகே வெள்ளிகுப்பம்பாளையம் என்ற கிராமத்தில் இருந்த ஆனந்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது தாயாருடன்  மருத்துவமனைக்கு வெள்ளிக்குப்பம்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நகர பேருந்து மூலம் சென்று கொண்டிருந்தார். 

அப்போது பேருந்தின் பின் பக்கத்தில் பயணம் செய்து வந்த அவரது கணவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தியின் நெஞ்சில் குத்திவிட்டு, பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். ரத்த வெள்ளத்தில் துடி துடித்த ஆனந்தியை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேட்டுப்பாளையம் போலீசார் உதயாவை தேடி வருகின்றனர். ஓடும் பேருந்தில் இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!