
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தது குறித்து மாறிமாறி பேசும் அமைச்சர்களை முதலில் விசாரிக்க வேண்டும் என கர்நாடக மாநில அதிமுக செயலாளரும் தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரைப் பார்த்தது, அவர் சாப்பிட்டது தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரை பார்த்ததாகவும் அவர் இட்லி சாப்பிட்டதாகவும் கூறிவந்த அமைச்சர்களும் கட்சியின் நிர்வாகிகளும் தற்போது அப்படியே மாற்றிக் கூறுகின்றனர். அப்போது பொய் கூறியதாகவும் சசிகலா மட்டுமே ஜெயலலிதாவை பார்த்ததாகவும் அமைச்சர்கள் இப்போது கூறுகின்றனர்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரைப் பார்த்தது தொடர்பாகவும் அவர் சாப்பிட்டது தொடர்பாகவும் மாறி மாறி முரணான கருத்துகளை பேசிவரும் அமைச்சர்கள் மீது சந்தேகம் எழுவதாகவும் முதலில் அவர்களை விசாரிக்க வேண்டும் எனவும் தினகரன் ஆதரவாளரான புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.