கோவில்களைவிட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் - ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பரபரப்பு கருத்து

By Velmurugan s  |  First Published Jul 18, 2023, 6:44 PM IST

தமிழகத்தில் எந்தெந்த தொண்மையான கோவில்களை அரசால் பராமரிக்க முடியவில்லையோ அந்த கோவில்களை விட்டு இந்துசமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்று ஓய்வுபெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் காவல்துறை ஐஜி பொன் மாணிக்கவேல், தமிழகத்தில் எந்தெந்த தொன்மை வாய்ந்த கோவில்களை அரசால் பராமரிக்க முடியவில்லையோ அவற்றை விட்டு அறநிலைத்துறை வெளியேற வேண்டும். தமிழகத்தில் இருந்து காணாமல் போன சிலைகளில் பத்தில் ஒரு மடங்கு சிலை தான் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது, 165 தொன்மை வாய்ந்த கோவில்கள் பராமரிக்க முடியாமல் அழிவு நிலையில் உள்ளன.

தேர்தலுக்கு முன்பு ஜனநாயக வாதியாக உள்ள அரசியல்வாதிகள், தேர்தல் முடிந்து  வெற்றி பெற்ற பின் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சர்வாதிகாரிகளாக மாறுகின்றார். தமிழக காவல்துறையில் சாட்சிகளுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் பொய் சாட்சிகளை நம்பி காவல்துறை செயல்படுகிறது. எனது ஆலோசனைகளை தமிழக அரசு ஏற்பதில்லை. ஆலோசனை கேட்கும் அதிகாரிகள் தற்போது கிடையாது.

Tap to resize

Latest Videos

பாஜக வாசிங் மெஷின் தான்; எங்களிடம் வருபவர்களை தூய்மையாக மாற்றிவிடுவோம் - வானதி சீனிவாசன்

தெய்வ விக்கிரகங்களை மட்டுமே அனைவரும் பொக்கிஷங்களாக பார்க்கின்றனர். ஆனால் அது தவறு. அங்கு உள்ள கல்வெட்டுக்களும் பொக்கிஷங்கள் தான். இவைகள் தான் அடையாளம். நிதிக்காக தான் அரசியல் கட்சிகள் சண்டை போடுகின்றன. 20% கமிஷனுக்காக அரசியல் கட்சிகள் சண்டை போட்டுக் கொள்கின்றனர். சிதம்பரம் கோவில் மிக தொன்மையான கோவில் கனக சபை உள்ளிட்ட விவகாரங்களில் நான் தலையிட விரும்பவில்லை.

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் மோடியும், அமித்ஷாவும் கம்பி எண்ணுவார்கள் - ஈவிகேஎஸ் கருத்து

சிவனடியார்கள் மற்றும் பெருமாள் அடியார்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு நான் செல்வேன் ஏனென்றால் அங்கு தான் ஆன்மிகம் உள்ளது. மோசமான ஆட்கள் என்று காவல்துறையினர் பெயர் எடுத்து உள்ளோம். காவல்துறையினர் பெயர் பொதுமக்கள் மத்தியில் கெட்டுப் போய் உள்ளது. ஓசியில் ஆம்லெட் கேட்கும் நிலைக்கு காவல்துறையினர் உள்ளனர். காவல்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இருவரையும் சரி சம நிலையில் வைத்து பார்க்க வேண்டும் என்றார்.

click me!