கன்னியாகுமரி மாவட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன் கோவில் பகுதியில் அருந்ததியர் இன மக்கள் 300க்கும் மேற்பட்டோர் சுமார் 5 தலைமுரையாக அங்கு வசித்து வருவதாகக் கூறப்படுகிறது, இந்நிலையில் அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று இலவச வீட்டுமனை பட்டா கேட்டு அருந்ததியர் இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது ஊர்வலமாக சாலையில் ஏறி மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். மேலும் அவர்கள் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச வேண்டும், இல்லை என்றால் மறியலை கைவிட மாட்டோம் என கூறி மறியலை தொடர்ந்தனர். இதனால் காவல் துறையினர் அவர்களை இழுத்து அப்புறப்படுத்த முயற்சித்தனர்.
undefined
குடும்ப வறுமையால் பணிக்கு சென்ற இளம் பெண் பட்ட பகலில் வெட்டி படுகொலை; ஒருதலை காதலால் வெறிச்செயல்
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் தள்ளுமுள்ளாகியது. மேலும் காவல் துறையினர் அவர்களை தாக்க முயற்சித்தனர். அவர்களும் மாறி காவல் துறையினரை தாக்க முயற்சித்தனர். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பெண்கள் சாலையில் படுத்து போராட்டத்தை முன்னெடுத்தனர். காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்த தாக்குதல் நடத்தினர்.
காலம் ரொம்ப கெட்டு பொயிருக்கு; பசங்கள முறையா கண்காணிங்க - அமைச்சர் கீதா ஜீவன் அறிவுரை
இந்நிலையில் இளைஞர் ஒருவர் திடீரென தலையில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளிக்க முயற்சித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கலைந்து செல்ல காவல் துறையினர் அவர்களை அடித்து விரட்டினர். இதனால் போராட்டக்காரர்கள் அங்கும், இங்குமாக ஓடினர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. போராட்டம், வன்முறை காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.