டிச.31 முதல் ஜன.2 வரை பொதுமக்கள் வர தடை… கன்னியாகுமரியில் மூடப்படும் சுற்றுலா தலங்கள்!!

By Narendran SFirst Published Dec 17, 2021, 8:48 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  டெல்டாவை வைரஸை விட 5 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது எனக் கூறப்படும் ஒமைக்ரான் பரவல் விகிதம் அதி வேகமாக இருந்து வருகிறது. முதல் தொற்று கண்டறியப்பட்டு 10 நாட்களே ஆகியிருக்கும் நிலையில் அதற்குள்ளாக 11 மாநிலங்களில் 101 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பிலிருந்த முதல்நிலை  இரண்டாம் நிலை தொடர்பாளர்களுக்கு பரிசோதனை செய்தால் தொற்று எண்ணிக்கை  அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பல நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கு 3 நாட்கள் பொதுமக்கள் செல்ல தடை என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 12 பேருக்கு இந்த வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 28 பேருக்கு அதன் அறிகுறி  இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதிக ஆபத்துள்ள நாடுகளிலிருந்து வந்த 12,767 பேரில் 2101 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 70 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு அதில் 28  பேருக்கு  ஒமைக்கிரான் வைரஸ் அறிகுறி இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடற்கரை பகுதிகளுக்கு செல்ல தடை 3 நாட்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டது.

புத்தாண்டு வர இருப்பதால் மக்கள் கூட்டமாக கூடி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. சில பெரிய மாநகரங்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை, நீர்வீழ்ச்சி பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு 3 நாட்கள் பொதுமக்கள் செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அரசிற்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

click me!