
பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது.
தமிழகம், புதுச்சேரியில் 8.60 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.
செய்முறைத் தேர்வுகள் ஏப்.25 முதல் மே 2-ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டன.
பிள்ஸ் 2 பொதுத்தேர்வு 28-ம் தேதி முடிகிறது.
தமிழகம், புதுச்சேரியில் 3,119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு மையத்தில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை
சென்னையில் மட்டும் 167 மையங்களில் 46,785 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
முறைகேடுகளை தடுக்க 4,291 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கும்.
முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசிக்கவும், அடுத்த5 நிமிடம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, சுயவிவரங்களை சரிபார்க்கவும் தரப்படும்.
காலை 10.15 முதல் மதியம் 1.15 வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.
மாற்றுத் திறன் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும்.
பொதுத் தேர்வு குறித்த சந்தேகங்கள், புகார்களை தெரிவிக்க 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
ஆசிரியர்கள், மாணவர்கள் தேர்வறைக்குள் செல்போன் கொண்டுவர தடை
விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாக்களால் எழுதக் கூடாது.
ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், அதிகபட்சமாக 3 ஆண்டுகள் தேர்வு எழுததடை
பள்ளி நிர்வாகம் ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த முயன்றால், அங்கீகாரம் ரத்து
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 23-ம் தேதி வெளியிடப்படும்.