அலர்ட்..! கத்திரி வெயில் ஆரம்பம்.. 1 - 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை.. அமைச்சர் அறிவிப்பு..

Published : May 04, 2022, 01:25 PM ISTUpdated : May 04, 2022, 01:27 PM IST
அலர்ட்..! கத்திரி வெயில் ஆரம்பம்.. 1 - 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை.. அமைச்சர் அறிவிப்பு..

சுருக்கம்

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் நாளை முதல் வழக்கமான வகுப்புகளுக்கு வர தேவையில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டுக்கான கத்திரி வெயில் இன்று தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு கத்தரி வெயில் நீடிக்க உள்ளது.  

இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில், வெயில் வழக்கத்தைவிட அதிகம் சுட்டெரிக்கும். தமிழகத்தில் ஏற்கெனவே 14 மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது. இன்னும் பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் சென்று சொல்லபடுகிறது. பகலில் வீசும் அனல்காற்றால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், வெயில் காரணமாக மாணவர்கள் தினமும் பள்ளிக்கு செல்வது மிக சிரமத்தை ஏறபடுத்தியது. இதனால் சனிக்கிழமைகளில் இனி 1- 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை என்று சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதனிடையே கோடை காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுந்தது. இதனால் இதுகுறித்து முதலமைச்சருடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அளித்து, நேரடியாக தேர்விற்கு வரவழைக்கலாமா எனபது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக  கூறப்பட்டது.

இதனிடையே, 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது என்றும் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வருகை தரத்தேவையில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மது-வால் லட்சக்கணக்கான பெண்கள் கண்ணீர் விட்டு கதறுறாங்க.. மகளிர் முன்னேறிவிட்டதாக ஸ்டாலின் கூறுவது வெட்கக்கேடு!
பெருந்துறையில் இடம் மாறும் விஜய் பிரச்சாரம்..! அடேங்கப்பா உள்குத்து அரசியல்..! புகுந்து விளையாடும் திமுக- அதிமுக புள்ளிகள்..!