நாளை பொதுத்தேர்வு.. தேர்வு மையத்திற்கு எத்தனை மணிக்கு வர வேண்டும்..? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

Published : May 04, 2022, 12:53 PM IST
நாளை பொதுத்தேர்வு.. தேர்வு மையத்திற்கு எத்தனை மணிக்கு வர வேண்டும்..? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

சுருக்கம்

நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், மாணவர்கள் காலை 9 மணிக்கு தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக காலை 8 மணிக்கு வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 9 மணிக்கு வந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணையை கடந்த மார்ச் 2 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன் 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெறகிறது.  அதே போல், 11 ஆம் வகுப்புக்கு மே 9 ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரையும் 10 ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.

பொது தேர்விற்கான ஹால் டிக்கெட்  அண்மையில் வெளியிடப்பட்டது. மேலும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 25 ஆம் தேதி தொடங்கி மே 2 ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற்றன. இந்நிலையில்  நாளை பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு மையத்திற்கு ஆசிரியர்கள், தேர்வர்கள் செல்போன் எடுத்து வர தடை விதித்து உத்தரவிட்டது. தேர்வர்கள், ஆசிரியர்கள் செல்போன் வைத்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும். தேர்வில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும் என்றும் பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தேர்வர்கள், ஆசிரியர் என அனைவரும் தேர்வு மையத்தில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் காலை 9 மணிக்கு தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக காலை 8 மணிக்கு வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 9 மணிக்கு வந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

50 மாணவிகள் என்னோட செல்ஃபி எடுத்தாங்க.. விஜய்யுடன் இணைந்ததற்காக வாழ்த்தினார்கள்! செங்கோட்டையன் நெகிழ்ச்சி
மிகவும் ஆபத்தானவர் உதயநிதி.. கொள்கையில் உறுதியுடன் இறங்கி அடிக்கிறார்.. முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!