நாளை பொதுத்தேர்வு..பள்ளி மாணவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயமா ? இதோ விபரம்..

By Raghupati RFirst Published May 4, 2022, 11:57 AM IST
Highlights

கொரோனா தொற்று காரமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்றது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துவிட்ட காரணத்தினால் பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயமாக நேரடி தேர்வுகளாக நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகிற 10ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத் தேர்வுகள் மே 6ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தனிமனித இடைவெளியைப் பின்பற்றித் தேர்வு நடைபெறும் என்ற போதிலும், மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல தேர்வு எழுதும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைத் தேர்வு மையத்திற்கு எடுத்து வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் காப்பி அடித்தால் தேர்வை ரத்து செய்து அடுத்த ஓராண்டுக்குத் தேர்வெழுதத் தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “உயிரே போனாலும் நடத்திக்காட்டுவோம்..!” ஸ்டாலின் அரசுக்கு மதுரை ஆதீனம் சவால்..!

இதையும் படிங்க : CBI Raid in Kerala CM's House : சரிதா நாயர் பாலியல் புகார்.. முதலமைச்சர் வீட்டில் நுழைந்த சிபிஐ.! பரபரப்பு.!

click me!