
புதுக்கோட்டை
பொன்னமராவதி பேரூராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதால் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகளை செய்து தர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரசு கட்சி தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் வட்டார, நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு நகரத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சோம.நாகராஜன், வட்டாரத் தலைவர் ஆர்.பழனிச்சாமி, காரையூர் வட்டாரத் தலைவர் பசீர்முகமது முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தலைவர் டி.மோகன்ராஜ், மாநில கொள்கைப் பரப்புச் செயலர் கராத்தே கண்ணையன் சிறப்புரையாற்றினர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பொன்னமராவதி பேரூராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. இந்த நிலையில், அரசு பாப்பாயி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகளை செய்து தர வேண்டும்.
பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகளை செய்து தர வேண்டும்
நவம்பர் 25-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவில் அதிகளவில் நிர்வாகிகள் பங்கேற்பது" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மாநில வர்த்தகர் அணித் துணைத் தலைவர் அரிமளம் முருகேசன்,மாவட்ட மாணவரணித் தலைவர் கே.ஆறுமுகம், வட்டாரத் துணைத் தலைவர் கே.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் இறுதியில் நகர இளைஞரணி துணைத் தலைவர் பிஎல்.வள்ளியப்பன் நன்றித் தெரிவித்தார்.
இதில், தமிழ் காங்கிரசு கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.