நள்ளிரவு கொட்டித் தீர்த்த மழை !! சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை !!!

First Published Nov 13, 2017, 7:22 AM IST
Highlights
chennai school leave today


சென்னையில் நேற்றிவு பலத்த  மழை கொட்டித் தீர்த்தால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும்  பலத்த மழை பெய்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு சென்னை மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி, புரசைவாக்கம், கண்ணதாசன்நகர், வியாசர்பாடி, எழும்பூர் , கிண்டி, ஈக்காட்டுதாங்கல், பாடி, மேற்குமாம்பழம், வேளச்சேரி, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, திருவொற்றியூர், எண்ணூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை  ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது.

இதே போன்று ,மாதவரம்,புழல், அடையாறு,ஆவடி, கோடம்பாக்கம், வளசரவாக்கம், மணப்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், மேடவாக்கம் , மடிப்பாக்கம்,கொடுங்கையூர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, மந்தைவெளி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

சென்னையில்  நள்ளிரவில் சாலையில் எதிரே வருபவர் கூட தெரியாத அளவுக்கு அரைமணிநேரத்தில், எண்ணூரில் 70 மி.மீ மழையும் , நுங்கம்பாக்கத்தில் 40மி.மீ மழை பெய்துள்ளது.

தொடர்ந்து இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து இன்று சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் வெளியிட்டார்.

இதே போல் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கும் கன மழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிப்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என்றும் . அடை மழை பெய்யும் பட்சத்தில் விடுமுறை பற்றி இன்று  காலை அறிவிக்கப்படும்  என்று மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்ததக்கது.

 

 

tags
click me!