AIADMK : "பொம்மை முதல்வர் ஸ்டாலின்.. உடனே பதவி விலகுக" தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி அதிரடி!

By Ansgar R  |  First Published Jun 20, 2024, 8:16 PM IST

Edappadi Palanisamy : கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கன்னட ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.


கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் அருந்திய 40க்கும் அதிகமானோர் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்த ஒரு அறிவிப்பை அக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். 

அதில்.. "கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளசாராயம் அருந்தியவர்களில் தற்போது வரை 42 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்ற செய்தி கேட்டும், இன்னும் பல பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி கேட்டும், ஆறாத்துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்." 

Tap to resize

Latest Videos

undefined

Money Cheating Case: தொழிலதிபரிடம் ரூ.300 கோடி மோசடி செய்த விவகாரம்; ரூ.3.2 கோடி நகைகள் பறிமுதல்

"இந்த கோர சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கி இருக்கிறது, இந்த சம்பவத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் கள்ளச்சாராயம் அருந்தி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்". 

"தமிழ்நாட்டில் மக்கள் விரோத விடியா திமுக அரசு பதவி ஏற்ற இந்த மூன்று ஆண்டுகளில், நடைபெறும் இரண்டாவது மிகப்பெரிய கள்ளச்சாராய மரண சம்பவம் இது. திமுக எதிர்கட்சியாக இருக்கின்ற பொழுது அரசு மதுபான கடைகளை மூட வேண்டும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம், என்று குடும்பத்தோடு சேர்ந்து கருப்பு சட்டை, கையில் பதாகை என நாடகங்களை அரங்கேற்றியவர் தான் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள்". 

"தற்போது பொம்மை முதலமைச்சர் திரு, ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகளை செய்வது மட்டுமல்லாமல், கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருள் புழக்கத்தை தமிழ்நாடு முழுவதும் கட்டவிழ்த்துவிட்டு இருக்கிறார். சட்டமன்றத்தில் காவல்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது, தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் அதிகரிக்கிறது என்பதை அதிகாரப்பூர்வமாக எடுத்துச் சொல்லி அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன்." 

"ஆனால் அதற்கு செவிமடுக்ககூட மனமில்லாத அரசாகத் தான் இந்த விடியா திமுக அரசு இருந்து வருகிறது. அதன் விளைவாக அப்பாவி மக்களின் உயிரை பலி கொடுத்திருக்கிறது, இந்த நிர்வாக திறனற்ற திமுக அரசு. இச்செயலுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்". 

"இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் கள்ள சாராயம் அருந்தியதன் காரணமாக ஏற்பட்டுள்ள உயிர் பலிக்கு தார்மீக பொறுப்பேற்று, தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்க தவறிய விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும், இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து கடமையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகின்ற 24.6.2024 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

Savukku: பொய் வழக்கு போடுவதில் காட்டும் கவனத்தை கள்ளச்சாராயத்திற்கு எதிராக காட்டியிருக்கரம்; சவுக்கு சங்கர்

click me!