டாஸ்மாக்கை எதிர்த்து ஊரே உருளுது புரளுது... இவர்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பாம்...சொன்னது யாரு ?

 
Published : Apr 12, 2017, 01:46 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
டாஸ்மாக்கை எதிர்த்து ஊரே உருளுது புரளுது... இவர்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பாம்...சொன்னது யாரு ?

சுருக்கம்

protest against tasmac all over tamilnadu

நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், அருகில் உள்ள ஹோட்டல்களில் மதுபானம்  விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக 2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் டாஸ்மாக் மற்றும் மதுபார்களை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு  பிறப்பித்ததை தொடர்ந்து கடந்த  1 ஆம் தேதி முதல் மதுபான கடைகள் மூடப்பட்டன.  இதன் மூலம் கிடைக்கும் வருவாயும் அரசுக்கு கிடைக்காமல்  போனது .

மேலும், மதுபான  விற்பனையை நம்பி, நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த ஹோட்டல்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக இந்திய ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்டுகள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்கு அரசுக்கு கிடைக்க வேண்டிய 2   லட்சம்   கோடி  ரூபாய் வருமானம்  இனி கிடைக்காது என தெரிவித்துள்ளனர். 

அதாவது தமிழ் நாட்டில் மட்டும் 2,800 டாஸ்மாக் கடைகளும், ஹோட்டல் மற்றும் கிளப்களில் இயங்கிய சுமார் 400க்கும் மேற்பட்ட மது பார்கள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.மேலும்  இந்த மதுக்கடை மூடலால் தமிழக அரசுக்கு 11,000 கோடி வருமானம் இழப்பு ஏற்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . 

PREV
click me!

Recommended Stories

அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!
இபிஎஸ்ஐ ஒரு பொருட்டாகவே மதிக்காத டெல்லி தலைமை.. 1008 கண்டிஷன் VBGRAMGஆல் முதல்வர் டென்ஷன்