அதிர்ச்சி..! ஆண்டுத்தோறும் இனி சொத்துவரி உயர்வு.. எவ்வளவு சதவீதம் உயர்த்தப்படும்.. அறிவிப்பு வெளியீடு..

By Thanalakshmi VFirst Published Apr 13, 2022, 11:08 AM IST
Highlights

15 வது மத்திய நிதி குழுமம் பரிந்துரையின் படி, மாநில உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கேற்ப சொத்து வரியினை ஆண்டுத்தோறும் உயர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி , ஒவ்வொரு நிதியாண்டும் சென்னை மாநகராட்சியின் சொத்து வரி உயர்த்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
 

சென்னை மாநகராட்சி:

சொத்து வரி மற்றும் தொழில் வரி ஆகியனவை சென்னை மாநகராட்சிக்கான வரி வருவாயில் பிரதானமாக இருக்கிறது. மாநகராட்சி மூல பெறப்படும் வரி வருவாய் மூலம் பணியாளர்கள் சம்பளம், திட்ட பணிகள், நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ரிசர்வ் மற்றும் உலக வங்கிகளிடம் இருந்த பெறப்பட்ட 2,000 கோடி ரூபாய்க்கு மேலான கடன்களுக்கு, வட்டியும் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. 1988ம் ஆண்டுக்கப் பின், 2017ல் சொத்து வரி உயர்த்தப்பட்டது. எனினும், ஒன்றரை ஆண்டுகளில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

மத்திய நிதி குழுமம் பரிந்துரை:

இதனால் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, மாநகராட்சியின் நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை மட்டும் 363 கோடி ரூபாயாக உள்ளது.இதனையடுத்து 15 வது மத்திய நிதி குழுமம் பரிந்துரையின் படி, மாநில உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கேற்ப சொத்து வரியினை ஆண்டுத்தோறு உயர்த்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்று கவுன்சில் கூட்டத்தில், சொத்து வரி சீராய்வுக்கான தீர்மானம் நிறைவேற்றபப்ட்டு ஒப்புதலும் பெறப்பட்டது. ஏனினும் சொத்து வரி உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்துகள், ஆட்சேபனைகள் கேட்கும் அறிவிக்கையை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தி:

அந்த அறிவிப்பில், இனி ஒவ்வொரு நிதியாண்டும், மாநில உள்நாட்டு உற்பத்திக்கு ஏற்ப சொத்து வரி உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் தற்போது உள்ள அடிப்படை தெரு கட்டணம், ஆறு சதவீதம் அல்லது ஐந்து ஆண்டு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வளர்ச்சி வீதம் ஆகியவற்றில் எது அதிகமாக உள்ளதோ அதன் அடிப்படையில் உயர்த்தப்படும்.

இவ்வாறு உயர்வு செய்யப்படும் சொத்து வரி, ஒவ்வொரு நிதியாண்டும் ஏப்., 1ம் தேதில் முதல் நடைமுறைப்படுத்தப்படும். சொத்து வரி சீராய்வு குறித்து ஆட்சேபனைகள் ஏதுமிருப்பின், அதை வரும் 30 நாட்களுக்குள் எழுத்துப் பூர்வமாக, மாநகராட்சி கமிஷனிடம் அளிக்கலாம். மேலும் சென்னையின் வளர்ச்சிக்கேற்ப கட்டமைப்புகள் செய்ய வேண்டியுள்ளது. எனவே, 15வது மத்திய நிதி குழுமம் பரிந்துரைப்படி சொத்து வரி சீராய்வு செய்யப்படுகிறது. அந்த பரிந்துரையில், ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரியை சீராய வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துவரி உயர்வு:

இதோடு மட்டுமல்லாமல், இந்த சொத்து வரி உயர்வு சென்னை மாநகராட்சி மட்டுமின்றி, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடும் அதிகாரிகள் மாநகராட்சியில் மட்டும் சொத்து வரி சீராய்வில் 1,500 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த ஆண்டுகளில், அப்போதைய நிலையை பொறுத்து சொத்து வரி சீராய்வு செய்யப்படும் என்றும் கூறினர்.

click me!