ரெய்டின் பின்னணியில் இருப்பது நிர்மலா தேவியா? வெளியானது அதிர்ச்சித் தகவல்...

First Published Jul 17, 2018, 2:58 PM IST
Highlights
professor nirmala behind screen in IT raid


எஸ்.பி.கே அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரை மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற வருமானவரி துறை அதிகாரிகளின் சோதனையில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், மூட்டை மூட்டையாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அடங்கிய 180 கோடி ரூபாய் பணம், 150 கிலோ தங்கம் என மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது.   

இன்றும் இரண்டாவது நாளாக தொடரும் சோதனையில் மேலும் பல ஆவணங்களும் கணக்கில் வராத பணம், சொத்துக்குறித்த ஆவணங்கள் மற்றும் தங்கம் சிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த மெகா ரெய்துக்கு முக்கிய காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றும் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத்  பெரிய மனிதர்களுக்கு கட்டிலுக்கு அனுப்ப படாத பாடுபட்ட ஆடியோ வெளியாகி, தமிழகம் முழுவதும் பெரிய அளவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியின் அவரது கணவர் சரவண பாண்டி என்பவர் காண்ட்ராக்டர். சரவண பாண்டியும்,செய்யாதுரையின் கடைசி மகன் பாலசுப்ரமணியனும் நண்பர்களாம். நிர்மலா தேவியும் சரவண பாண்டியும் பல வருடங்களாகவே பிரிந்துதான் இருக்கிறார்கள். நிர்மலா தேவிக்கும் கவர்னர் அலுவலகத்துக்கும் இருக்கும் தொடர்புகளை சரவண பாண்டிதான் பாலசுப்ரமணியனிடம் சொல்லியிருக்கிறார்.

பாலசுப்ரமணியன் மூலமாக செய்யாதுரைக்கு விஷயம் போக, அவர்தான் ஆட்சி மேலிடத்திடம் எல்லாவற்றையும் கொட்டியிருக்கிறார். அதன் பிறகுதான் நிர்மலா தேவி ஆடியோ வெளியாகியிருக்கிறது. அதாவது தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் கவர்னருக்கு செக் வைக்க நிர்மலா தேவியை பலிகடா ஆக்குவது என முடிவெடுத்துதான் ஆடியோவை வெளியிட்டார்கள்.

இந்த விஷயம் எல்லாம் இப்போது மத்திய அரசுக்கு போயிருக்கிறது. அந்தக் கோபத்தில்தான் செய்யாதுரை நிறுவனத்தின் மீது ரெய்டு நடவடிக்கை பாய்ந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ, எடப்பாடியார் மீது இருக்கும் கோபத்தில்தான் இந்த ரெய்டு நடவடிக்கை என டெல்லி மேலிடம்  நடத்தும் ஆபரேஷனில் பக்காவாக தெரிகிறது.

click me!