வாய் பேச முடியாத சிறுமியை சீரழித்த காமவெறியர்கள்; போதை மாத்திரை கொடுத்து 7 மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம்  

Asianet News Tamil  
Published : Jul 17, 2018, 01:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
வாய் பேச முடியாத சிறுமியை சீரழித்த காமவெறியர்கள்; போதை மாத்திரை கொடுத்து 7 மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம்  

சுருக்கம்

Sexual harassment girl

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் செவித்திறன் பாதித்த 7-ம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் விளையாட்டு என்ற பெயரில் கடந்த 7 மாதங்களாக மயக்க ஊசி மற்றும் போதை மாத்திரை கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 
தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த 18 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில வருடங்களாக நாடுமுழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இளம் பெண்கள், திருமணமான பெண்கள், சிறுமிகள், மூதாட்டிகள் என யாரையும் விட்டு வைப்பதில்லை இந்த காமவெறியர்கள். இதனால் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 7 மாதங்களாக 15 பேர் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்த சம்பவம் குலை நடுங்கச் செய்துள்ளது. 

சென்னை அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் ஒருபெண் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த போலீசார் புகாரை கண்டதும் அதிர்ச்சியடைந்தர்.
அந்தப் புகாரில் சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் காது கேட்காத, சரியாக வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி என தகவல் தெரிவிக்கின்றன. 

சிறுமி தனியாக இருக்கும் நேரங்களில் அடுக்குமாடி குடியிருப்பின் காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரம் கடந்த ஜனவரி மாதம் நடந்துள்ளது. இந்த விவகாரம் அங்கு பணிபுரியும் லிப்ட் ஆஃப்ரேட்டர், பிளம்பர், வாயிற்காவலர் என மற்றவர்களுக்கும் தெரியவர அவர்களும் சிறுமியை பலாத்கார
செய்தனர். மொத்தம் 15 பேர் சிறுமியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை இந்தக் கொடுமை அச்சிறுமிக்கு நடந்துள்ளது. சிறுமியின் உடல்நிலை நாளுக்குள் நாள் மோசமடைந்து வந்ததையடுத்து மருத்துவரிடம் பரிசோதித்தனர். 

அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்ததும் தாயார் அதிர்ச்சி அடைந்தார்.  தன்னை யார் பாலியல் வன்கொடுமை செய்தது ? என்பதை சரியாக கூற முடியாத நிலையில் சிறுமி இருந்துள்ளார். இருப்பினும் சிறுமியின் பேச்சை உணர்ந்து கொள்ளும் அவரது தாயார் அனைத்து உண்மைகளையும் கேட்டு அறிந்துள்ளார்.சிறுமி அளித்த தகவலின் பேரில் 15 பேர் மீது அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து உடனே அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்த காவல்துறையினர் அங்கிருந்த காவலர்கள் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனர். பின்பு போலீசாரின் விசாரணையில் உண்மை வெளிவந்தது. அதில் காவலாளிகள், பிளம்பர் உட்பட  18 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் அவர்கள் இப்போது புதுச்சேரியில் கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளார்! எடப்பாடி பழனிசாமி பேச்சு
இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் ஊத்தப்போகும் கனமழை.. ஓரிரு இடங்களில் ஆலங்கட்டி!