'சாதனை திருநங்கை'... இந்தியாவின் முதல் எஸ்ஐ பிரித்திகா யாஷினி

 
Published : Apr 01, 2017, 11:22 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
'சாதனை திருநங்கை'... இந்தியாவின் முதல் எஸ்ஐ பிரித்திகா யாஷினி

சுருக்கம்

prithika yashini is the first transgender si in india

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதும், அதன் மூலம் பலர் உயர் அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக திருநங்கை ஒருவர், எஸ்ஐயாக பொறுப்பேற்கிறார். அதிலும், தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்ற இருக்கிறார்.

தமிழக காவல்துறைக்கான உயர் பயிற்சியகத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் ஒரு பிரித்திகா யாஷினி என்ற திருநங்கை உள்பட 1,031 பேர் எஸ்ஐ பதவிக்கான பயிற்சியில் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒரு ஆண்டு நடைபெற்ற பயிற்சி நேற்று நிறைவுபெற்றது. இதையொட்டி, சிலம்பாட்டம், கராத்தே, நெருப்பு விளையாட்டு உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில், எஸ்ஐயாக தேர்வு செய்யப்பட்டவர்கள், சாகசங்களை செய்து, அசத்தினர்.

இதில், இந்தியாவிலேயே முதல் எஸ்ஐயாக செய்யப்பட்ட திருநங்கை பிரித்திகா யாஷினிக்கு, பயிற்சி அளித்த உயர் அதிகாரிகள் உள்பட சக பயிற்சியாளர்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். போராடி பெற்ற பதவியை அவர் முழுமையான மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் இன்று, பிரித்திகா யாஷினிக்கு பணி  ஆணை வழங்கப்படுகிறது. அதையொட்டி அவர், அதே மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!
கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!