பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் பலி..! பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்... நிவாரண உதவி அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Jul 30, 2023, 10:01 AM IST

கிருஷ்ணகிரி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில்,  பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளனர். 
 


பட்டாசு ஆலை விபத்து

கிருஷ்ணகிரி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இந்தநிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள் டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோன சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்" என அந்த டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

பிரதமர்- முதல்வர் இரங்கல்

இதே போல தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம், பழையபேட்டை நகரம், நேதாஜி ரோடு, போகனப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கடையில் நேற்று (29-7-2023) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்களை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். 

காயமடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும். காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து.. பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு..!

click me!