அரசு திட்டத்தின் பெயரால் ஏமாற்றுபவரிடம் உஷாரா இருங்க மக்களே! – ஆட்சியர் வேண்டுகோள்…

 
Published : Apr 01, 2017, 08:09 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
அரசு திட்டத்தின் பெயரால் ஏமாற்றுபவரிடம் உஷாரா இருங்க மக்களே! – ஆட்சியர் வேண்டுகோள்…

சுருக்கம்

Pretender to the name of the program usara state line folks Collector request

புது வாழ்வு திட்டம் என்ற அரசு திட்டத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி பணம் பிடுங்கும் நபர்களிடம் இருந்து உஷாராக இருங்கள் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் கேட்டுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அந்தச் செய்திக்குறிப்பில், “விருதுநகரில் “புது வாழ்வு திட்டம்” என்ற பெயரைப் பயன்படுத்தி பண மோசடி செய்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களிடம் விழிப்புடன் இருங்கள்.

அரசின் “புது வாழ்வு திட்டம்” விரைவில் முடிவடைய இருக்கிறது. இத்திட்டத்தை தாங்கள் செயல்படுத்த உள்ளதாக கூறி பண மோசடியில் சில நபர்கள் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் அரசின் இந்த திட்டத்தின் பெயரை பயன்படுத்தி தாங்கள் அரசு சார்பு நிறுவனம், தொண்டு நிறுவனம், இடைத்தரகர்கள் என கூறி ஏமாற்றும் வேலையை செய்கின்றனர்.

இவர்கள், தனி நபர், சுய உதவிக் குழுக்களை சந்தித்து கல்வி, வாகனம், வீடு கட்ட, நிலம் வாங்க, தொழிற்கடன் போன்றவற்றிற்கு குறைந்த வட்டியில் 60 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்று தருகிறோம் என்று கூறியும், இதற்காக உறுப்பினர் ஆய்வு கட்டணம் என்ற பெயரில் ரூ.300 முதல் ரூ.500 வரை வசூலிக்கின்றனர் என்றும் எனக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது மோசடி செயலாகும்.

எனவே, விழுப்புரம் மக்கள் இந்நபர்கள் குறித்து விழிப்போடு இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும், இதுபோன்ற ஏமாற்றும் நபர்களை பற்றி புகார் தெரிவிக்க புது வாழ்வு திட்ட மாவட்ட திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்” என்று கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!