குடியரசு தலைவரான பின் முதல் முறையாக தமிழகம் வந்தார் திரௌபதி முர்மு

By Velmurugan s  |  First Published Feb 18, 2023, 12:13 PM IST

இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்த இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.


கோவை ஈஷோ யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை கொண்டாடும் விதமாக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து மதுரை வந்த குடியரசு தலைவருக்கு தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார். குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு கோவில் 5 அடுக்கு பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலை சுற்றியுள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு இன்று கடை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் சிறுமிக்கு தாலி கட்ட நினைத்த தாத்தா, குடும்பம் நடத்திய சித்தப்பா, ரூட்டு போட்ட தாய் கைது

மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு கோவை செல்லும் அவர், ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார்.

click me!