கேரளாவை பூர்வீகமாக கொண்ட மனிஷா 8 மாத கர்ப்பிணியான இவர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலுள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் திடீரென மனிஷா விஷக்காய்ச்சல், இரும்பல், மூச்சுத்திணறல் காரணமாக சுயநினைவு பாதிக்கப்பட்டார்.
விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்த கர்ப்பிணி பெண்ணை செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றி தாயும், சேயும் நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட மனிஷா 8 மாத கர்ப்பிணியான இவர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலுள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் திடீரென மனிஷா விஷக்காய்ச்சல், இரும்பல், மூச்சுத்திணறல் காரணமாக சுயநினைவு பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, உடனே அந்த பெண் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க;- பிறந்த குழந்தைக்கு எலும்பு முறிவு.. செவிலியர் பிரசவம் பார்த்ததால் விபரீதம்..? ஓசூர் அருகே அதிர்ச்சி..
உடனடியாக மகப்பேறு மருத்துவமனையில் உள்ள பிரசவ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் முழுமையாக பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவில் மனிஷா கடுமையான மூளைக்காய்ச்சல், மூளை அழற்சி, சுவாச செயலிழப்பு உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் 2.4 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 14 நாட்களாக குழந்தை பராமரிக்கப்பட்டு வந்தது.
பிரசவத்திற்கு பின் தாய் மனிஷா மகப்பேறு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு மருத்துவ குழுவால் தினமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். 14 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உயர்தர சிறப்பு மருந்துகள் வழங்கப்பட்டு சுவாசம் சீர் படுத்தப்பட்ட பின்னர் 19 நாட்கள் உயர் சார்பு பிரிவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு, மகப்பேறு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் சிறப்பு மருத்துவ குழுக்களின் ஆலோசனை மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் நாராயணசாமி மற்றும் நிர்வாகத்தினர் ஒத்துழைப்புடன் முழுமையாக உடல்நிலை சரியான நிலையில் 33 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின்பு தாயும் சேயும் நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க;- சினிமாவையே மிஞ்சிய தரமான சம்பவம்.. தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்திய நிறைமாத கர்ப்பிணி.!