பிறந்த குழந்தைக்கு எலும்பு முறிவு.. செவிலியர் பிரசவம் பார்த்ததால் விபரீதம்..? ஓசூர் அருகே அதிர்ச்சி..

By Thanalakshmi V  |  First Published Nov 2, 2022, 12:07 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில், பிறந்த பச்சிளம் குழந்தையின் கையில் 3 இடங்களில் எலும்புமுறிவு ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. .இதுதொடர்பாக கொடுத்த புகாரின் அடிப்படையில் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஓசூர் அருகே கொத்தூர் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் - வசந்தா தம்பதியினர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் வசந்தா இரண்டாவது முறை கரப்பமடைந்துள்ளார். அவருக்கு கடந்த 20-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். 

மேலும் படிக்க:கோவை கார் வெடி விபத்து சம்பவம்..! திருச்சியில் சோதனை செய்த போலீசார்.. செல்போன் பறிமுதல்

Tap to resize

Latest Videos

அன்று மாலை அவருக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே மருத்துவர் இல்லாததால் செவிலியர்கள் பிரவசம் பார்த்ததாகவும் அதில் பிறந்த குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுக்குறித்து முறையாக குழந்தையின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல், பச்சிளம் குழந்தையை மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் கைகளில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தைக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளித்து, எலும்பு முறைவு ஏற்பட்ட இடங்களில் கட்டு போடப்பட்டுள்ளது. மேலும் தீவிர சிகிச்சை அனுமதிக்கபப்ட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. இதுகுறித்து மாவட்ட சுகாதார துறையில் அளித்த புகாரின் அடிபடையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க:கோவை கார் வெடி விபத்து சம்பவம்..! நெல்லையில் 4 பேரிடம் போலீசார் விசாரணை
 

click me!