தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை.. சென்னையில் விடாமல் தொடரும் மழை..

By Thanalakshmi VFirst Published Nov 2, 2022, 11:24 AM IST
Highlights

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மிக கனமழை பெய்த நிலையில் 5 நாட்களுக்கு கனமழையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பரவலாக கனமழை நீடித்து வருகிறது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:நவம்பர் 16-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை ஆரஞ்சு ஆல்ர்ட் விடுக்கப்பட்டநிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக  7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 3 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2 வது நாளாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் மாநகரில் முக்கிய சாலைகள், குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

இந்தப் பகுதிகளில் மோட்டார்கள் கொண்டு மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் கனமழையால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் படிக்க:சென்னையில் கன மழை..! நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரி..! திறக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்கள்


 

click me!