நவம்பர் 16-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumarFirst Published Nov 2, 2022, 10:42 AM IST
Highlights

மயிலாடுதுறையில் ஆண்டாண்டு காலமாக துலா உற்சவ விழா எனப்படும் காவிரியில் புனித நீராடும் நிகழ்ச்சி வடநாட்டின் கும்பமேளாவுக்கு நிகராக  நடைபெற்று வருவது வழக்கமான ஒன்று.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கோவில் திருவிழாக்களை முன்னிட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்துக்கு நவம்பர் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் ஆண்டாண்டு காலமாக துலா உற்சவ விழா எனப்படும் காவிரியில் புனித நீராடும் நிகழ்ச்சி வடநாட்டின் கும்பமேளாவுக்கு நிகராக  நடைபெற்று வருவது வழக்கமான ஒன்று. கங்கை தனது பாவத்தினை போக்கிட வரம் கேட்டபோது சிவபெருமான் வரமளித்ததை அடுத்து ஐப்பசி மாதம் 30 நாட்களும் புனித நீராடி தனது பாவங்களை போக்கிக் கொண்டதாக பக்தர்களின் நம்பிக்கையாகும். லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம்  துலா விழாவிற்கு மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில்  புனித நீராடி வருகிறார்கள். 

இதையும் படிங்க;- வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி.. கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம்..!

இதனை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 19ம் தேதியை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை.. முன்னேற்பாடு செஞ்சிக்கோங்க..!

click me!