பிரணாப் சென்னை வருகை – நாளை விமானப்படை விழாவில் பங்கேற்கிறார்...

 
Published : Mar 02, 2017, 09:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
பிரணாப் சென்னை வருகை – நாளை விமானப்படை விழாவில் பங்கேற்கிறார்...

சுருக்கம்

Pranab to visit Chennai - tomorrow the Air Force participates in the ceremony

சென்னை தாம்பரத்தில் நாளை நடைபெறவுள்ள விமானப்படை விழாவில் கலந்து கொள்ள இந்திய குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி இன்று சென்னை வந்தார்.

சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களை கவுரவிக்கும் வகையில் விழா நாளை நடைபெற உள்ளது.

இதேபோல், அடையாரில் நாளை இந்திய பெண்கள் சங்க நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.

இந்த விழாக்களில் பங்கேற்க இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வந்தார். சென்னை வந்த குடியரசு தலைவரை தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

இதையடுத்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு புறபட்டு சென்றார்.

நாளை தாம்பரத்தில் நடக்க உள்ள விழாவிற்கு 9 மணிக்கு வருகிறார். 11.20 வரை விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார் குடியரசு தலைவர்.

பின்னர், அடையாரில் நடக்கும் விழாவிற்கு 12 மணிக்கு செல்கிறார். அங்கு விழாவில் பங்கேற்று 1.15 மணிக்கு டில்லி புறப்பட்டு செல்கிறார்.

இதனால் சென்னையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!
ஜனவரி 3ம் தேதி பள்ளி, கல்லூரி அரசு அலுவலங்களுக்கு விடுமுறை..! எந்த மாவட்டத்திற்கு? என்ன காரணம் தெரியுமா?