திருநெல்வேலி மாவட்டம் பாபநாம் அருகே முறையாக மின்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி அரசுப் பள்ளிக்கான மின்சாரத்தை திடீரென ஊழியர்கள் துண்டித்ததால் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அனவன்குடியிருப்பு பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பள்ளியின் கடந்த மாத மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால அந்த பள்ளிக்கு செல்லும் மின் விநியோகம் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களில் நிலவும் கடும் வெயிலின் தாக்கத்தினாலும் மின்சாரம் இல்லாததாலும் வகுப்பறையில் பாடம் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகி, மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பள்ளி வளாகத்திலுள்ள மரத்தடியில் பாடம் நடத்தி வருகின்றனர்.
நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு !
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தோம், பாபநாசம் சுற்றுவட்டார பகுதியில் எந்தவொரு அரசு பள்ளிக்கான மின்சார பில்லும் இதுவரை மின்சாரத்துறையினர் எங்கள் அதிகாரிகளுக்கு அனுப்பவில்லை. மேலும் உரிய முன்னறிவிப்பு ஏதுமின்றி மின்சாரம் துண்டித்தால் அனைத்து பள்ளிகளிலும் துண்டித்து இருக்க வேண்டும். இங்கு மட்டும் ஏன் துண்டித்தனர் என தெரியவில்லை என்று கூறினர்.
Modi Kabaddi league: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கிய அண்ணாமலை
பிரச்சினை தொடர்பாக மின்வாரியம் தரப்பில் கூறுகையில், 15 நாட்களுக்கு முன்பே பள்ளியில் மின்சாரம் கட்டணம் காட்டாதது குறித்து தெரிவித்து இருந்தோம். ஆனால் தற்போது வரை கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.