கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்... உத்தரவிட்டார் டிஜிபி சைலேந்திரபாபு!!

By Narendran SFirst Published Sep 30, 2022, 6:18 PM IST
Highlights

கோடநாடு கொலை கொள்ளை வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

கோடநாடு கொலை கொள்ளை வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. மறைவுக்குப் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தது. மர்ம கும்பல் ஒன்று கோடநாடு பங்களாவின் கவலாளி ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு, அங்கு இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக  வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி போலீசார், மனோஜ், சயான், கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: திருமணத்தில் சோறு போட்டது ஒரு குத்தமா? குமுறும் அமைச்சர் மூர்த்தி

இந்த வழக்கில் போலீசார் தேடி வந்த ஜெ.வின் கார் ஓட்டுனர் கனகராஜ், 2017ஆம் ஆண்டில் சேலத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த தினேஷ் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு மேலும் சிக்கலானதை அடுத்து கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆகஸ்ட் மாதம் மறுவிசாரணை தொடங்கியது.

இதையும் படிங்க: நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு !

மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழுவாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக, சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, ஜெ.வின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் என சுமார் 316 பேரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டு அது தற்போது நிறைவுபெற்றுள்ளது. இந்த நிலையில் தனிப்படை போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுளார்.

click me!