தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அனைத்து யூனிட்களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்.. காரணம் இது தான்.?

By Thanalakshmi VFirst Published May 22, 2022, 11:45 AM IST
Highlights

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தமுள்ள 5 யூனிட்களிலும் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தமுள்ள 5 யூனிட்களிலும் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தமுள்ள 5 யூனிட்கள் மூலம் தலா 210 மெகாவாட் வீதம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் காற்றலை மற்றும் சூரிய மின்சக்தி மூலம் அதிக மின்சாரம் கிடைத்து வருவதால், 5 அலகுகளும் இன்று காலை நிறுத்தப்பட்டது.

மேலும் படிக்க: கவனத்திற்கு!! பிளஸ் 2 பொதுத்தேர்வு ரிசல்ட் எப்போது..? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்..

இதனால் அனல் மின் நிலையத்தில் 1050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் போதிய அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும் காற்றாலை மற்றும்  சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் கிடைப்பதால் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: ஜவுளி உற்பத்தி நிறுத்தம்.. 15 நாட்கள் வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியது.. ஒரு நாளைக்கு ரூ.100கோடி இழப்பு..

click me!