இனி அதிகரிக்கும் மின்வெட்டு..?கையிருப்பு இல்லாத நிலக்கரி..முக்கிய அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

Published : May 13, 2022, 11:23 AM ISTUpdated : May 13, 2022, 11:25 AM IST
இனி அதிகரிக்கும் மின்வெட்டு..?கையிருப்பு இல்லாத நிலக்கரி..முக்கிய அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

சுருக்கம்

நிலக்கரி தட்டுபாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தமுள்ள 5 அலகுகளில் நான்கில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, ஒரே ஒரு அலகில் மட்டும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.  

நிலக்கரி தட்டுபாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தமுள்ள 5 அலகுகளில் நான்கில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, ஒரே ஒரு அலகில் மட்டும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் 1,050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3 வது அலகு தவிர மற்ற நான்கு அலகுகளிலும் மின் உற்பத்தி இன்று நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: india inflation : பணவீக்கத்தால் ஏழைகளைவிட பணக்காரர்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்: நிதி அமைச்சகம் வருத்தம்

தற்போது அனல்மின் நிலையத்தில் கையிருப்பில் உள்ள நிலக்கரியை வைத்து 5 அலகுகளையும் இயக்க முடியாததால், நிலக்கரி கையிருப்பு அதிகரிக்கும் வரை ஒரு அலகில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க: மகிழ்ச்சி செய்தி..! மாணவர்களே அலர்ட்.. நாளை முதல் கோடை விடுமுறை.. எத்தனை நாட்கள் விடுமுறை..?

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் எதிர்பாராத திருப்பம்... மழை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த வானிலை மையம்
விழுந்தது ஓட்டை..! உடைந்தது திமுக கூட்டணி..! ஸ்டாலினுக்கு சவால் விட்ட வேல்முருகன்..!