பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு செப் 13ஆம் தேதி ஆரம்பம்!

By SG BalanFirst Published Sep 11, 2023, 10:03 PM IST
Highlights

பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்குச் செல்பவர்களுக்கு வசதியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 13ஆம் தேதி ஆரம்பம் ஆகிறது.

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் இன்னும் இரண்டு நாட்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பெங்கல் சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 13ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

வருகிற 2024ஆம் வருடம் பொங்கல்  பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Latest Videos

செப்டம்பர் 13ஆம் தேதி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 2024ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி வியாழக்கிழமை ரயிலில் சொந்த ஊருக்குச் செல்ல முடியும். செப்டம்பர் 14ஆம் தேதி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 2024ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்குப் பயணிக்கலாம்.

தங்கப் பத்திரம் விற்பனை இன்று மீண்டும் தொடக்கம்! இந்த 2வது வாய்ப்பை நழுவ விடாதீங்க!

செப்டம்பர் 15ஆம் தேதி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 2024ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி சனிக்கிழமை சொந்த ஊருக்குப் பயணிக்கலாம். செப்டம்பர் 16ஆம் தேதி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்குப் பயணிக்கலாம்.

செப்டம்பர் 17ஆம் தேதி ரயில் டிக்கெட் முன்பிதவு செய்தால், ஜனவரி 15ஆம் தேதியும், செப்டம்பர் 18ஆம் தேதி முன்பதிவு செய்யும் பயணிகள் ஜனவரி 16ஆம் தேதியும் ரயிலில் பயணிக்க முடியும். செப்டம்பர் 19ஆம் தேதி டிக்கெட் புக் செய்தால் ஜனவரி 17ஆம் தேதி ரயிலில் பயணம் செய்யலாம்.

ஜனவரி 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை போகிப் பண்டிகை, ஜனவரி 15ஆம் தேதி திங்கட்கிழமை தைப்பொங்கல், ஜனவரி 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 17ஆம் தேதி புதன் கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில்வே கால அட்டவணைப்படி, பயணத்தைத் திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்தால், கடைசி நேர நெருக்கடியில் தவிப்பதைத் தவிர்க்கலாம்.

ஏறாத ரயிலுக்கு தினமும் டிக்கெட் வாங்கும் கிராம மக்கள்! தயாள்பூர் ரயில் நிலையத்தின் சுவாரஸ்யமான கதை!

click me!