இந்த வருஷம் பொங்கல் பரிசு 'நஹி’…? ஏன்னா… சிக்கல் அப்படி…!

By manimegalai aFirst Published Sep 24, 2021, 8:22 PM IST
Highlights

குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சென்னை: குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் பொங்கல் திருவிழா 4 நாட்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா என்பதால் மகிழ்ச்சிக்கு அளவிருக்காது.

அதன்படி பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு தரப்படுகிறது. இதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தொகுப்பில் பச்சரிசி, முந்திரி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் இருக்கும்.

இதுதவிர 1.80 கோடி ரேஷன் அட்டைய பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலை தரப்படும். கடந்தாண்டு அரிசு அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2500 தரப்பட்டது.

ஆனால் இந்தாண்டு பொங்கலுக்கு வேட்டி, சேலை தரப்படுமா என்ற கேள்வியும், சந்தேகமும் எழுந்துள்ளது. அதற்கு காரணம்…. இந்த வேட்டி, சேலைகளை தயாரிக்க 6 மாதங்கள் ஆகும். அதற்கான நிதியும் ஜூனில் ஒதுக்கப்பட்டு விசைத்தறிகளுக்கு மூலப்பொருட்கள் தர அளிக்கப்படும்.

ஆனால் நடப்பாண்டில் 499 கோடி நிதி ஒதுக்கி இருந்தாலும், நூல் கொள்முதலுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இனிமேல் டெண்டர் ஒதுக்கப்பட்டு பணிகள் ஒதுக்கப்படுவது சாத்தியமில்லை என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆகையால், ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு வேட்டி, சேலை கிடைக்காது என்று தகவல்கள் கூறுகின்றன.

click me!