கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள கோட்டாறு சவேரியார் தேவாலயத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த கத்தோலிக்க தேவாலயமான கோட்டார் சவேரியார் தேவாலயத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. தேவாலயத்தின் வாயிலில் பெண்கள் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். தேவாலயத்தின் முகப்பில் கரும்புகள் கட்டி வைத்தும் இந்துக்கள் கடவுளுக்கு படையல் இடுவது போல் பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை படையலிட்டும் வெண் பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கல் இடப்பட்டது. இது தொடர்பாக பொங்கல் இட்ட பெண்கள் கூறுகையில், வெண்பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கலிட்டு இறைவனுக்கு படைப்பதோடு இன்று நடைபெறும் திருப்பலியில் பங்கேற்கும் 500க்கும் மேற்பட்டோருக்கு பாயாசம் வழங்கப்படும் எனவும் கூறினர்.
undefined
இதையும் படியுங்கள்: Pongal: பழனிக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்: 3 மணி நேரமாக காத்திருந்து சாமி தரிசனம்!
இதையும் படியுங்கள்: இந்தியாவிலேயே தமிழகம் தான் நம்பர் 1.. சுற்றுலாத்துறையில் தமிழகம் சாதனை - அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
இதையும் படியுங்கள்: பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க முன்பதிவு விவரங்கள் வெளியீடு