புதுக்கோட்டையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது...

 
Published : Dec 19, 2017, 09:12 AM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
புதுக்கோட்டையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது...

சுருக்கம்

Pondicherry liquor bottles worth Rs 20 lakh worth Rs. One arrested

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஒரு வீட்டில் பாண்டிச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.20 இலட்சம் மதிப்புள்ள சாராய பாட்டில்களை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைதும் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ளது கணபதிபுரம். இங்குள்ள ஒரு வீட்டில் சாராய பாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டு உள்ளது என்று மதுவிலக்கு காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்பேரில், புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு காவலாளர்கள், கணபதிபுரத்திற்குச் சென்று சோதனை இட்டனர். இதில், 23200 பாண்டிச்சேரி மாநில சாராய பாட்டில்கள் பெட்டி, பெட்டியாக அடுக்கி வைக்கப்படிருந்தன.

இதனையடுத்து அவற்றை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.20 இலட்சம் இருக்கும். அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த தஞ்சாவூர் மாவட்டம், வலங்கைமானைச் சேர்ந்த அருள்பாண்டியன் என்பவரை காவலாளர்கள் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த விசாரணையில், அருள்பாண்டியன் உள்ளிட்ட சிலர் இரகசியமாக பாண்டிச்சேரியில் இருந்து சாராய பாட்டில்களை கடத்தி வந்து புதுகை மற்றும் தஞ்சை பகுதிகளில் விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட அருள்பாண்டியனிடம் மேலும் விசாரணை  நடைப்பெற்று வருகிறது.

PREV
click me!

Recommended Stories

50 மாணவிகள் என்னோட செல்ஃபி எடுத்தாங்க.. விஜய்யுடன் இணைந்ததற்காக வாழ்த்தினார்கள்! செங்கோட்டையன் நெகிழ்ச்சி
மிகவும் ஆபத்தானவர் உதயநிதி.. கொள்கையில் உறுதியுடன் இறங்கி அடிக்கிறார்.. முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!