"கட்டிங் கொடுத்தவன் கிளாஸ்லேயே மண்ணள்ளி போட்டீங்களே பேமானீங்களா"! கொலைவெறியில் புதுவை குடிமகன்கள்...

Asianet News Tamil  
Published : May 24, 2017, 06:32 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
"கட்டிங் கொடுத்தவன் கிளாஸ்லேயே மண்ணள்ளி போட்டீங்களே  பேமானீங்களா"! கொலைவெறியில் புதுவை குடிமகன்கள்...

சுருக்கம்

Pondicherry drinkers angry against Tamil nadu drinkers

தமிழ்நாடு மீது தாங்கொன்னா ஆத்திரத்தில் இருக்கிறது புதுவை. ஏன்பா யாராச்சும் நாராயணசாமிய நோகடிச்சுட்டாங்ளா? என்று மொக்கையாக திங் பண்ண வேண்டாம். இது வேற மேட்டர்!...

தமிழகத்தில் ஆங்காங்கே அம்மணிகள் டாஸ்மாக்கை அடிச்சு நொறுக்கி பணால் பண்ணுவது தொடர் கதையாகி இருக்கிறது. ஏற்கனவே உட்கட்சி பஞ்சாயத்துகளால் ஆறுமணிக்கு மேலே ஆட்டோக்கார வடிவேலு போல் நிலையில்லாமல் நடுங்கிக் கொண்டிருக்கிறது! இந்நிலையில் மக்கள் மீது அதுவும் பொம்பளைங்க மேல் கைவைத்தால் படா பேஜார் ஆகிடும் என்று அடக்கி வாசிக்கிறார்கள். ‘அடியே! அரை கிளாஸ் கட்டிங்குக்காக நான் காலங்காட்டி இருந்து அல்லாடிக்கினுகீறேன். நீ இன்னடான்னா ஃபுல் பாட்டில் பொட்டியை அசால்டா உடைச்சுட்டுட்டு வந்ருகியே! மாமனுக்கு ஒரு குவாட்டராச்சும் இட்டாரக்கூடாதாமே?’ என்று புருஷன்கள் சவுண்டு விட, ‘யேய்! நான் கெவுருமண்டையே எதுத்து ரவுசு வுட்டவ. எங் கையில ராங்கா டீல் பண்ணுன அப்புறம் டாப்பு எகிறிடும். புள்ளிங்களுக்கு இஸ்கூல் பீசு கட்ட வக்கில்ல, உன்க்கு குவாட்டர் கேக்குதா குவாட்டர்.’ என்று பொண்டாட்டிகள் போட்டுப் பொளக்கும் காட்சிகள் தாறுமாறாக தமிழ்நாட்டில் ஓடிக் கொண்டிருக்கின்றன. 

இந்த சூழ்நிலையில் நம்ம பக்கத்து வூடான புதுச்சேரியின் முதல்வர் நாராயண சாமி ஆன்னா வூன்னா தமிழ்நாடுக்குள்ளே வந்துட்டு போற மாதிரி அங்கேருந்து பப்ளிக்கும் இங்கே வந்துட்டு போவது வழக்கம். குடியை கெடுக்குற டாஸ்மாக்குகளை தமிழ்நாட்டு பொம்பளைங்கோ அடித்து தூள் பண்றதை பார்த்துட்டு புதுவை பொம்பளைங்களுக்கும் வீரம் பீறிட்டுகிச்சு.

இன்னைக்கு காத்தால சொரியாங்குப்பம் பகுதியில் ரொம்ப நாளா மெர்சல குடுத்துகினு இருந்த மதுக்கடையை பொம்பளைங்கோ அடிச்சு துவம்சம் பண்ணிட்டாங்க. கையோட அங்கேயிருந்த மூணு கடைகளுக்கு தீயும் வைக்க, புதுவையே பத்திக்கிச்சு. 

விஷயம் அரசின் கவனத்துக்குப் போக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மதுக்கடைகளை மூடச்சொல்லி உத்தரவு போட்டுவிட்டார்கள். இதனால் அடிக்கிற வெயிலுக்குஇதமா பதமா ஐஸ் பீர் வாங்கலாமுன்னு வந்த குடிமகன்கள்  காலி கடை, பூட்டப்பட்ட கடைகள் ஆகியவற்றை பார்த்து நடுநடுங்கிப் போய்விட்டனர். 

உடனே என்கொயரியை போட்டவர்கள், இத்தனைக்கும் காரணம் தமிழ்நாடுதான் என்பது தெரியவந்ததும் கொந்தளித்துவிட்டார்கள். ‘அடேய் அடேய், எங்க நைனாவுக்கு நைனா காலத்துல இருந்து ஒங்களுக்கு சகாய ரேட்டுல சரக்கு சப்ளை பண்ணுனோமேடா! அடுத்த இஸ்டேட் ஆளுன்னு தெரிஞ்சும் மீட்டர ஏத்தாம கட்டிங் காம்பினேஷனுக்கு ஓ.கே. சொன்ன வள்ளளுங்கோடா நாங்க. உங்க இஸ்டேட்டுல சரக்கடிக்க சிக்கல்னா எங்களை நோக்கிதானேடா ஓடியாருவீங்க. குட்டிப் புள்ளிங்களை குந்தவெச்சு குஸ்கா ஊட்டுற மாதிரி உங்களுக்கு ஊத்து ஊத்துன்னு ஊத்தி வுட்டு இஸ்டேட் பார்டர் வரைக்கும் பத்திரமா டிராப் பண்ணுவோமேடா. 

கட்ட கடைசியில எங்களுக்கே கட்டிங் இல்லாம ஆகுற நிலைமைக்கு கொண்டாந்துட்டீங்களேடா பேமானீங்ளா! 
உங்களுக்கெல்லாம் இனிமே தவிச்ச வாய்க்கு சரக்கே கிடைக்காதுடா. சரக்கு ஊத்தாத வயிறெரிஞ்சு சபிக்குறோம்டா நீங்க நல்லாவே குடிக்க மாட்டீங்கடா.” என்று தாறுமாறாக சாபம் போட்டு சாத்தியிருக்கிறார்கள். 

சரக்கு தேசமான புதுவையின் குடிமகன்கள் விடும் சாபம் பலிக்குமுன்னு பெருசுங்களே சொல்லியிருக்காங்க. இதை நினைச்சாதான் மெர்சலாகுது மனசு. 
மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்!

PREV
click me!

Recommended Stories

பிஎச்.டி. மாணவர் சேர்க்கையில் அதிரடி மாற்றம்! அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
பெண்களுக்கு ஜாக்பாட்.. இனி ஒவ்வொரு கோடையிலும் எக்ஸ்டிரா ரூ.2,000.. தமிழக அரசு குஷியான அறிவிப்பு!