"தனியார் பாலால் குழந்தைகளுக்கு கூட புற்று நோய் வருகிறது" - ராஜேந்திர பாலாஜி பகீர் தகவல்

Asianet News Tamil  
Published : May 24, 2017, 04:56 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
"தனியார் பாலால் குழந்தைகளுக்கு கூட புற்று நோய் வருகிறது" - ராஜேந்திர பாலாஜி பகீர் தகவல்

சுருக்கம்

rajendra balaji says private milk causes cancer to children

தனியார் பாலில் ரசாயனம் கலப்பதாகவும் இதனால் குழந்தைகளுக்கு கூட புற்றுநோய் வருவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ஆவின் பால் மட்டுமே தரமாக தயாரிக்கபடுவதாகவும், தனியார் பாலில் ரசாயனம் கலக்கபடுவதாவும் குற்றம் சாட்டினார்.

பால் கெடாமல் இருக்க தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், தனியார் பால் மூலம் குழந்தைகளுக்கு கூட புற்றுநோய் வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ் தொலைகாட்சி ஒன்று அவரிடம் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்ட்கபட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கூறியதாவது:

பிரிட்ஜில் இருந்து பால் வெளியே எடுத்தால் 5 மணி நேரத்திற்குள் பால் கெட வேண்டும். இல்லையென்றால் பாலில் ரசாயனம் கலந்திருப்பது உறுதி என குறிபிட்டார்.

ஆவின் பால் விற்பனை, பால் கொள்முதல் ஆகியவை உயர்ந்திருக்கிறது.

தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகள் புனேவிற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. 10 நாட்கள் ஆகியும் கெடாத பால் தூய்மையான பால் கிடையாது. ஆதாரம் கிடைத்தவுடன் பால் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனிடையே ராஜேந்திர பாலாஜியின் இத்தகைய கருத்துக்கு பால் முகவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

பிஎச்.டி. மாணவர் சேர்க்கையில் அதிரடி மாற்றம்! அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
பெண்களுக்கு ஜாக்பாட்.. இனி ஒவ்வொரு கோடையிலும் எக்ஸ்டிரா ரூ.2,000.. தமிழக அரசு குஷியான அறிவிப்பு!